அநுராதபுரம் என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண் – இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறுவதில்லை – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Thursday, February 10th, 2022

 “ரஜரட்ட – அநுராதபுரம் என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண். 2015 இல் எமக்குத் தோல்வி ஏற்பட்டபோதுகூட ரஜரட்டவில் வெற்றி பெற்றோம். இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் ‘முதலாவது பொதுஜன பேரணி’ நிகழ்வு அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது –

“ரஜரட்ட – அநுராதபுரம் என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண். 2015 இல் எமக்குத் தோல்வி ஏற்பட்டபோதுகூட ரஜரட்டவில் வெற்றி பெற்றோம். இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறவில்லை.

பிரபாகரனைத் தோற்கடிக்க முடியாது, புலிகள் அமைப்பு பலம் மிக்கது என அன்று தெரிவித்தனர். ஆனால், அந்த அமைப்புக்கு மூன்றரை வருடங்களில் முடிவுகட்டிய தலைவர்தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

நாடு நெருக்கடியான நிலையில் இருக்கும்போதுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. எமது ஜனாதிபதி துவண்டுவிடவில்லை. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டினார். நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாத்தார். எனவே, இவ்விரு தலைவர்களும் உலக வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்” என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: