அநீதியான முறையில் வியாபார நடவடிக்கை – கடந்த வருடம் 15,923 சுற்றிவளைப்புக்களூடாக 6 கோடிக்கும் அதிக பணம் நீதிமன்றினால் அபராதம்!

கடந்த ஆண்டு அநீதியான முறையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களை தேடி 15 ஆயிரத்து 923 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இவற்றுள் 14 ஆயிரத்து 906 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை குறித்த சட்ட நடவடிக்கைகாரணமாக 6 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் அபராதமாக நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் சபை சுட்டிக்காட்டியுள்ளது..
இந்த சுற்றிவளைப்புக்களில் 3 ஆயிரது 880 அரிசி தொடர்பாகன சுற்றிவளைப்புக்களும், 651 சீனி தொடர்பாகன சுற்றிவளைப்புக்களும் மற்றும் 471 பருப்பு தொடர்பாகன சுற்றிவளைப்புக்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், நுகர்வோர் பொருட்கள் போன்று பிஸ்கட் உற்பத்திகள், மருந்து மற்றும் அழகு சாதன உற்பத்திகள் மற்றும் ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட பல உற்பத்திகள் தொடர்பிலும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|