அத்துமீறும் வள்ளங்களை கட்டுப்படுத்த சட்டத்தில் திருத்தம்!

Thursday, October 5th, 2017

இலங்கைக் கடற்பகுதியில் வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களினால் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்குட்பட்ட கடல் பிரதேசத்தில் வெளிநாட்டு வள்ளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை ஒழுங்குறுத்தல், கட்டுப்படுத்தல் , முகாமைத்துவம் தொடர்பிலான 1979ஆம் ஆண்டின் 59ஆம் இலக்க வெளிநாட்டு வள்ளங்களை ஒழுங்குறுத்துவதற்கான சட்டத்தின் மூலம் ஒழுங்குறுத்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

கடந்த மூன்று தசாப்த காலமாக இந்த துறையுடன் சம்பந்தப்பட்ட சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் இடம்பெற்றுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

Related posts:

நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டு அறிக்கைகள் முன்வைக்கப்படுவது பொருத்தமற்றத...
பட்டதாரி அரச ஊழியர்களுக்கு பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான...
பொலனறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உள்பட 22 பேர் தொழு நோயுடன் அடையாளம் - சுகாதார திணைக்கள...