அத்துமீறி மீன்பிடிப்பு : வருடத்துக்கு 9000 மில்லியன் இழப்பு!

Tuesday, December 20th, 2016

அத்துமீறி இந்திய மீனவர்கள் இந்திய மீனவர்கள்  மீன்பிடிப்பதன் காரணமாக வருடத்துக்கு 9000 மில்லியன் இழப்பு ஏற்படுவதாக மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி காரணமாக இலங்கையின் பொருளாதார வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வாரத்துக்கு 6000 தொன் மீன்கள் சட்டவிரோதமாக இந்திய மீனவர்களால் பிடிக்கப்படுகின்றது.

மேலும் ஒவ்வொரு வாரத்திலும் 3 இந்திய சட்டவிரோத படகுகளும் வருடத்துக்கு 5000 க்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைகின்றன. இது இலங்கையின் மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பாதிப்பாக உள்ளதாக தெரிவித்தார்

28a4fe7163e8435ebf14585aadc68073

Related posts: