அத்துமீறி நுழைந்த 28 மீனவர்கள் கைது!

Sunday, March 13th, 2016
இலங்கையின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்ததாக கூறி, 28 தமிழக மீனவர்களை காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று(13) கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை, பாம்பன், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள கடலோரக் குப்பங்களை சேர்ந்த இந்த மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்களை காங்கேசந்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு இயந்திரப் படகு மற்றும் இரண்டு நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இம்மாதம் மூன்றாம் திகதி எட்டுபேர், ஆறாம் திகதி 29 பேர், பத்தாம் திகதி நான்குபேர் என முன்னதாக 41 மீனவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.  இந்த மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக இவ்வாறு தமிழக மீனவர்கள் கைதாகியுள்ளதாகவும் இன்று கைதானவர்களுடன் சேர்த்து மொத்தம் 69 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன..

Related posts: