அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த 13 மீனவர்களும் , மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்றையதினம் மூன்றாவது தவணையாக குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது 13 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்து உத்தரவிட்டார்.
Related posts:
தகவல் அதிகாரிகளது விபரங்கள் இணையத்தளத்தில்!
நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்லும் வகையிலான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக...
நாட்டை முழுமையாக முடக்காது பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜனாதிபதி தீர்மானம்!
|
|