அத்துமீறிய கடலட்டை விவகாரம்: மாவட்ட கடற்தொழில் பணிப்பாளர் சுதாகரிடம் மகஜர் கையளிப்பு!

Monday, June 11th, 2018

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய கடலட்டை மீன்பிடித் தொழிலை நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் யாழ்.மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டதுடன் அரச அலுவலகங்களையும் முற்றுகையிட்டனர்

யாழ் வடமராட்சி கிழக்கு மருதன்கேணி பகுதியில்,அப்பகுதியை சாராத வேறு மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலக கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக அப்பகுp மீனவர்கள் மேற்கொண்டுவரம் போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று இப்போராட்டம் இடம்பெற்றது

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுசங்க சமாசங்களின் சம்மேளனம் வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து இந் ஆர்பப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன

தமது பகுதிகளில் அத்து மீறி கடலட்டை தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மீது கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது

கண்டி வீதியிலுள்ள யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கத்திற்கு முன்பாக இப்போராட்டம் ஆரம்பமாகி யாழ் மவாட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட செயலகத்தை சிறுது நேரம் முற்றுகையிட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை போராட்டக்காரர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்

அதைத்தொடர்ந்து வடமாகாண ஆளனர் செயலகத்திற்கும் சென்ற போராட்டக்காரர்கள் வடமாகாண ஆளுனர் ஊடாக ஜனாதிபதிக்கான தமது மகஜரினை ஆளனரின் உதவி செயலாளர் ஏ.செல்வநாயகத்திடம் கையளித்தனர்

அத்துடன் இதையடுத்து யாழ் பண்ணையிலுள்ள கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு சென்ற போராட்டக்காரர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் மாவட்ட கடற்தொழில் பணிப்பாளர் சுதாகரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்

Related posts: