அத்துமீறினால் ரூ 17.5 கோடி – அமைச்சர் மகிந்த அமரவீர!

Saturday, January 27th, 2018

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டுப் படகுகளுக்கு 60 லட்சம் முதல் 17.5 கோடி ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர நாடாளுமன்றில் தெரிவித்தார்.

படகில் மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றை வெளியில் வைத்திருந்தால் 40 இலட்சம் முதல் 15 கோடி வரை தண்டப்பணம் அறவிடப்படும்.

அத்துடன் வடக்கு மீனவர்கள் பிரச்சினைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்க்கப்படும். வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எமக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.

Related posts: