அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் கைது !

Sunday, September 29th, 2024

யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நேற்றிரவு இவர்கள் கைதாகியுள்ளனர்.

கைதான மீனவர்கள் தலைமன்னாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts: