அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – அதிக விலையில் விற்பனை செய்தால் தெரிவிக்குமாறும் கோரிக்கை!

Thursday, November 18th, 2021

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், அவை விலை கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 60 மருந்துகளின் 131 வகைகளின் விலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்துகளில் எதனையும் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்வது சட்டவிரோதமானது என அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏதாவது ஓரிடத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அறிவிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஆர்.எம.எஸ்.கே. ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: