அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதன் மூலம் இலங்கை மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது பங்களாதேஸ் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, June 1st, 2022

பங்களாதேஷ் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதன் மூலம் இலங்கை மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Tareq Md Ariful Islam, 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இன்று கையளித்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடையில் புற்றுநோய் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு, அண்டிபயாடிக் வாய்வழி மற்றும் ஊசி மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு, வலிப்பு எதிர்ப்பு மற்றும் ஆஸ்துமா எதிர்ப்பு மருந்துகள் உட்பட 79 அத்தியாவசிய மருந்துகள் உள்ளன.

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதற்கு பங்களாதேஷ் மகிழ்ச்சியடைவதாகவும், வரலாற்று ரீதியாக தமக்கு தொடர்புள்ள நாட்டிற்கு உதவுவதற்கு இந்த வாய்ப்பை பெற்றமைக்கு பெருமையளிப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கைக்கு எவ்வகையிலும் உதவ முன்வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: