அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான விசேட குழு முதல் தடவையாக கூடுகிறது!

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு முதல் முறையாக இன்று கூடவுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில், அந்த அமைச்சில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சமுர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம் - பிரதமர் அறிவிப்பு!
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறைகள் இரத்து - 5 ஆயிரத்து 500 பேருந்துகள் நாளைமுதல...
பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள மக்களுக்கு எம்மாலான உதவிகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன் - ஈ.பி.டி.ப...
|
|