அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 6 மாதங்கள் சிறை – வர்த்தகர்களை எச்சரிக்கும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் !

Monday, March 30th, 2020

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக 6 மாத கால சிறை தண்டனை விதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகின்றமை தொடர்பில் பெருமளவிலான முறைப்பாடுகள் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்

Related posts: