அத்தியாவசிய பொருட்களுக்கு நிவாரணம்!

Wednesday, July 13th, 2016
15 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு நிவாரண விலையின் கீழ் நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் குறித்த பொருட்களுள் சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள், டின் மீன் , பயறு, கௌபி, நெத்தலி, கடலை, கொத்தமல்லி, பாம் எண்ணெய், சோயா, மாசி மற்றும் கருவாடு ஆகிய பொருட்கள் அடங்குவதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: