அத்தியாவசிய பொருட்களின் மீதான வரி அதிகரிக்கப்படவில்லை –  நிதி அமைச்சு!

Tuesday, January 23rd, 2018

2018 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தக பொருட்கள் சட்டத்தின் கீழான வர்த்தகமானி அறிவிப்பின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகமானி அறிவிப்பின் மூலம் மாசிக்கருவாடு , செத்தல்மிளகாய் உள்ளிட்ட பலசரக்கு வகைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை நடைமுறைப்படுத்தும் காலஎல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை மாத்திரமே ஆகும்.

2007ஆம் ஆண்டு இலக்கம் 48இன் கீழான வீசேட வர்ததக பொருட்கள் வரி சட்டத்தில் உள்ள விதிமுறைகள் மாத்திரம் பொருட்களுக்கான இந்த வரி விதிக்கப்படவேண்டிய வரி அறவிடப்படும் உரிய கால எல்லை வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரிமாதம் 18ஆம் திகதி அன்று இலக்கம் 2054/40 கீழான வர்த்தமான அறிவிப்பின் மூலம் மாசிக்கருவாடு உள்ளிட்ட சில பொருட்கள் மீது 2017 ஜுலை 19ஆம் திகதி அன்று இலக்கம் 2028/44 என்று குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டிருந்த வரி விகிதாசாரம் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுள்ளது. இதற்கமைவாக வர்த்தகமானி அறிவிப்பின் மூலம் பொருட்கள் வரி அதிகரிக்கப்படமாட்டாது. அத்துடன் எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்கு நிலவும் விலைகளுக்கு அமைய இந்த பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்யமுடியும்.

Related posts: