அத்தியாவசிய தேவைகளுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை முள்ளி பகுதி மக்கள் கோரிக்கை!

Tuesday, May 22nd, 2018

அரியாலை முள்ளி பகுதியில் வாழும் மக்கள் தாம் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு கோரி  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்திரி அலன்ரின் (உதயன்) கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குறித்த பகுதிக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டனர். இதன்போதே குறித்த கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.

இதன்போது வீட்டுத்திட்டம் மற்றும் வீடு புனரமைப்பு மின்சார இணைப்புக்கள் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கைவிடுத்திருந்தனர்.

மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அவதானஞ் செலுத்திய கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த விடயத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: