அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் அறிவிப்பு!

Monday, July 12th, 2021

அத்தியாவசிய சேவைகளுக்காகப் பயணிக்கின்றவர்களுக்காக மாத்திரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பண்டுக சுவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மேல்மாகாணத்தில் அத்தியாவசிய சேவைக்காக 11 ஆயிரத்து 438 தனியார் பேருந்துகள் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக  மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்ஜீவ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேல் மாகாணத்தில் இன்றுமுதல் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரடன தெரிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத பயணிகளின் எண்ணிக்கை நாளந்தம் அதிகரித்ததினால், புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்று அதிகாலை 50 புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன. பிற்பகலில் மேலும் 53 புகையிரத சேவைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: