அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இலங்கைக்கு செல்லவும் – தனது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்து!
Thursday, September 23rd, 2021அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கையை கொரோனா தொற்றின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதாக நேற்று பிரித்தானியா அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே, பிரித்தானியர்கள் இலங்கைக்கு அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் பயணிக்குமாறு பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாயச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
குறுகிய அறிவிப்பின் பேரில் இலங்கையில் பயணத்தடைகள், ஊரடங்கு சட்டம் என்பன ஏற்படுத்தப்படும் என்பதோடு, விமானப் பயணங்களிலும் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம்!
ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு!
எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் முறையான திட்டமொன்றை உடன் வகுக்குமாறு துறைசார் ...
|
|