அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Thursday, November 22nd, 2018

போதுமான அளவு அத்தியாவசிய பொருட்கள் சந்தைகளில் காணப்படுவதாகவும் அவற்றின் விலைகள் சற்று குறைவடைந்து காணப்படுவதாகவும் அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் வர்த்தக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் ஹேமக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஒரு கிலோ சீனியின் மொத்தவிலை இன்று 94 ரூபாவாக காணப்படுகிறது. ஒரு கிலோ பருப்பின் மொத்தவிலை 103 ரூபாவிற்கும் 104 ரூபாவிற்கும் இடையில் காணப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகளும் சற்று குறைவடைந்து காணப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியும் போதுமான அளவு சந்தைகளுக்கு கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பண்டிகைக்காலத்திற்காக வர்த்தகர்கள் போதுமானளவு அத்தியாவசியபொருட்களை இறக்குமதிசெய்திருப்பதாகவும் ஹேமக்க பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts: