அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சலுகை விலையில்!

Thursday, October 11th, 2018

அத்தியாவசிய உணவுப் பொருட்களை சலுகை விலையில் ச.தொ.ச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

ரூபாவின் பெறுமானம் குறைந்துள்ள போதிலும் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் நுகர்வோருக்கு தற்போதுள்ள விலையில் வழங்கப்படுவதாக அமைச்சின் பணிப்பாளர் திருமதி இந்திகா ரணதுங்க தெரிவித்தார். அரசாங்கம் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

வாழ்க்கைச் செலவினக் குழு வாராந்தம் ஒன்றுகூடி சந்தை விலை மட்டங்களை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts:

கிரிக்கெட் வீரர் கொலை: பன்னாட்டுப் பொலிஸாரின் உதவியுடன் குற்றவாளியைக் கைது செய்ய உத்தரவு!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியல் ...
போதனா வைத்தியசாலையாக தரமுயர்ர்கின்றது ஹோமாகம ஆதார வைத்தியசாலை - ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சர...