அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம்!

Friday, May 27th, 2022

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் தங்கள் இறக்குமதிக்காகப் பயன்படுத்திய ‘சப்ளையர் கடன் வசதியை’ பயன்படுத்துவதை நிறுத்துமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு மாற்றாக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: