அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியின் போதான 100% நிதி வைப்பு கட்டுப்பாடு நீக்கம் – பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான 6 மாத பொருளாதாரத் திட்டம் – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Friday, October 1st, 2021

பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான 6 மாத பொருளாதாரத் திட்டத்தை மத்திய வங்கி தலைமையகத்தில் இன்று (1) மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 6 மாதங்களுக்கு ‘பராத்தே’ ஒப்பந்தத்தின் மூலம் சொத்துக்களை கையகப்படுத்தக் கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதனிடைய அடுத்த ஆறு மாதங்களுக்குள் கட்டணத்தை (பிரிமியம்) செலுத்தத் தவறிய வாகனங்களை திரும்பப் பெறுவதை நிறுத்துமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பழைய கடன்கள் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முனைவோரின் வட்டி வீதங்களை வழங்க 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 100% வைப்புத் தொகை தேவைப்பாடு இன்று (01) முதல் நீக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத’;துடன் இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன், தேவைக்கேற்ப மட்டுமே இறக்குமதியை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் டொலருக்கான பற்றாக்குறை நிலவியதால் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற 623 பொருட்களுக்கு எதிராகக் கடந்த செப்டெம்பர் 9 ஆம்திகதி முதல் மத்திய வங்கியினால் கடுமையான இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதேவேளை, வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்கான ஜனாதிபதி செயலணி, தமது கடமைகளைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியாள் வெளிநாட்டு நாணய கணக்குகளான வதிவற்றோர் வெளிநாட்டு நாணய கணக்குகள் (NRFC) மற்றும் வதிவோர் வெளிநாட்டு நாணய கணக்குகள்  (RFC) தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் கடன் வட்டிக்கான நிவாரணத்துக்காக 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு ஒதுக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்கான ஜனாதிபதி செயலணி தமது கடமைகளைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

2017 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டமும் அதன் சமூக பொருளாதார அரசியல் தாக்கங்களும்"...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி அனைத்துத் தகவல...
சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் - ஐ.நா உணவு ம...