அத்தியாவசியமற்ற அனைத்து செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்துங்கள் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, October 5th, 2020

அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பகுதியில் தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 150 தொழிலார்களின் பி.சி.ஆர். முடிவுகளின் அடிப்படையில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, அத்தியாவசிய பயணங்களை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் வெளியில் செல்பவர்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தள்’ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: