அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு வெளியான செய்தி உண்மைக்குப் புரம்பானது – இராணுவத் தளபதி!

Thursday, April 29th, 2021

எந்த நேரத்திலும் நாடு முடக்கப்படலாம் என்றும், அன்றாட நுகர்வுக்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுமாறும் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புரம்பானது என இராணுவத் தளபதி ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முழு நாட்டையும் முடக்கி வைப்பதற்கான நோக்கம் இதுவரையிலும் இல்லை என்றும் தேரிவித்துள்ளார்.

அத்துடன், அதிகமான தொற்றாளர்கள் அடையாளம்காணப்படுகின்ற பிரதேசங்களின் கிராம அலுவலர் பிரிவுகள் அல்லது பொலிஸ் பிரிவுகள் எந்தவித முன் அறிவித்தலுமின்றி தனிமைப்படுத்தப்படலாம் என இராணுவத் தளபதி ஜெனரால் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: