அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு!

Tuesday, February 12th, 2019

பெரிய வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதாரம், மீன்பிடி, பண்ணை வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரீசன் தெரிவித்தார்.

பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், 125 ரூபாவாகக் காணப்பட்ட உழுந்தின் இறக்குமதி வரி 200 ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளது. உருளைக் கிழங்கின் இறக்குமதி வரியானது 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

படைப்புழுவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் மேலும் பாதிக்கப்படாமலிருக்க சோளத்துக்கான இறக்குமதி வரி 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. படைப்புழு முழுமையாக அழிக்கப்படாவிட்டாலும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


முத­ல­மைச்­சர்­க­ளுக்கு இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு தடவை அழைப்பு!
பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய பதிலளிக்காதது கவலையளிக்கிறது - ஜாதிக ஹெல உறுமய தலைவர் ஓமல்பே சோபித தேரர்...
போதைப் பொருளைத் தடுக்க கடலோரக் காவல் நிலையம்!
இலங்கை ஒலிம்பிக் வீரர்களுக்கு ஜனாதிபதி கௌரவிப்பு!
கல்வியற் கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்!