அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி – ஒரு பில்லியன் டொலர் கடனை நீடிக்க இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!
Wednesday, May 31st, 2023அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று கைச்சாத்திட்டுள்ளது.
இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் 2023 மார்ச்சில் கைச்சாத்திடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா வழங்கிய 1 பில்லியன் டொலர் கடனில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் 576.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே இலங்கை பயன்படுத்தியுள்ளது.
எஞ்சியுள்ள 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலும் ஒரு வருடத்திற்கு பயன்படுத்த இலங்கைக்கு அனுமதி வழங்குவதே இன்றைய உடன்படிக்கை என செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்கும் என்றும் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|