அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Monday, July 4th, 2022

இந்த வருடத்திற்குத் தேவையான அரிசிக் கையிருப்பு நாட்டில் இருப்பதாக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முறை சிறுபோகத்தில் சிறந்த நெல் அறுவடை கிடைக்கப்பெறும். எதிர்வரும் பெரும்போகத்திலும் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை நிவாரண விலையில் வழங்குவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் நலின் பெர்னான்டோ தெரிவித்தார். அவ்வாறான பொருட்கள் தற்சமயம் சதோச விற்பனை நிலையத்தின் ஊடாக விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நுகர்வோர் விவகார சபையானது அரிசி, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு சட்டப்பூர்வ அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயம் செய்ய தீர்மானித்துள்ளது.

நுகர்வோர் விவகார சபையின் தீர்மானத்தை வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார சபையின் தலைவர் என்.எஸ்.எம்.சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

மக்கள் மீதான கடுமையான சுமையை குறைக்கவும் வர்த்தகர்கள் நுகர்வோரை சுரண்டுவதற்கான வாய்ப்பைக் குறைக்கவும் நாங்கள் இந்த கொள்கை முடிவை எடுத்தோம்” என்று சம்சுதீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: