அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை திங்களன்று விடுவிக்க நடவடிக்கை – அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவிப்பு!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளைமறுதினம் திங்கள்கிழமை விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்திள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின்போதே, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் நிதியமைச்சின் தலையீட்டில் துறைமுகத்தில் தேங்கியிருந்த 500 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ கைது!
நல்லுறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்கு அரசுடன் நெருங்கிச் செயற்படத் தயார் -இந்தியா அதிரடி அற...
அரிசி - சிமெந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன த...
|
|