அது ஒரு அரசியல் நாடகம் – வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு!

Monday, April 17th, 2017

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க செயலாளர் மனுல பெரேரா, வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டமை முற்று முழுதாக ஒரு கண்துடைப்பு அரசியல் நாடகம் என்றும் வேலையற்ற பட்டதாரிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 49 நாட்களாக வடமாகாண பட்டதாரிகள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத் செயலாளர் மனுல பெரேரா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பட்டதரிகளை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தமது நியமனம் தொடர்பாக பொறுப்புவாய்ந்த தரப்பினரின் உறுதியான வாக்குறுதி எழுத்துமூலம் தரப்பட்டால் மாத்திரமே தாம் போராட்டத்தை கைவிடுவோம் என வாடமாகாண பட்டதாரிக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 49 நாட்களாக பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதிலும் எந்தவொரு தரப்பும் தமக்கான சரியான தீர்வைப் பெற்றுத்தரவில்லை என்றும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts:

பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவட...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தக...
ஜனாதிபதி ஜப்பான் பயணம் - ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமனம்...