அதிவேக வீதிகளில் விதிமுறைகளை மீறிய 19,837 சாரதிகள் கைது !

சுமார் 21 வீதி விதிமுறை மீறல்கள் தொடர்பில் கடந்த 5 மாதங்களில் மட்டும் அதிவேக பாதைகளில் பயணம் செய்த 19837 சாரதிகள் கைது செய்யப்ப்ட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 19837 வழக்குகள் தக்கல் செய்யப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
அத்துடன் இவை தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தண்டப்பணப் பத்திரம் வழங்கல் ஊடாக மட்டும் இந்த காலப்பகுதிக்குள் 9919930 ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
இதன் போது கைது செய்யப்பட்டவர்களில் குடி போதையில் வாகனம் செலுத்திய 21 பேர், அபாயகரமாக வாகனம்ச செலுத்திய 3 பேர், கவனயீனமாக வாகனம் செலுத்திய நான்கு பேர், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்திய 7127 பேர், பாதை விதிமுறை மீறிய 2183 பேர், இடது பக்கமாக வாகனம் செலுத்தாத 197 பேர், வெள்ளைக்கோட்டுக்கு குறுக்காக வாகனம் செலுத்திய 57 பேர், சமிக்ஞைக்கு விரோதமாக வாகனம் செலுத்திய 180 பேர், செலுத்த பொருத்தமற்ற நிலையில் உள்ள வாகனங்களைச் செலுத்திய 9 பேர், அதிக புகையுடன் வாகனம் செலுத்திய 16 பேர், கையடக்கத் தொலைபேசியில் கதைத்தவாறு வாகனம் செலுத்திய 346 பேர், ஆசனப்பட்டி அணியாமல் பயணம் செய்த 24 பேர், அலங்காரங்கள் மற்றும் மேலதிக விளக்குகள் தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் 85 பேர், கறுப்பு நிற கண்ணாடியுடன் பயணம் செய்தமை தொடர்பில் 1378 சாரதிகளும் சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி பயணித்தமை தொடர்பில் 108 பேரும், வாகன வருமான உத்தரவாதப்பத்திரம் மற்றும் கப்புறுதிப்பத்திரம் இன்றி பயணம் செய்த 819 பேரும், காப்புறுதிப் பத்திரம் இன்றி பயணித்த 150 பேரும், அதிக சத்தம் மற்றும் தேவையற்ற வகையில் ஒலி எழுப்பிய மூன்று சாரதிகளும் வாகன நிறுத்தல் தொடர்பில் 244 சாரதிகளும் மின் விளக்குகள் தொடர்பில் 4007 பேரும் வேறு விதிமுறை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் 2870 பேரும் கைது செய்யப்பட்டோரில் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|