அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ் வண்டிகளின் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பஸ் வண்டிகளின் பஸ் கட்டணங்கள் இன்று முதல் 20 ரூபாவினால் குறைக்கப்படும். இதனடிப்படையில் மஹரகமவில் இருந்து காலி வரையிலான பயணத்திற்கான புதிய கட்டணம் 420 ரூபா என அதிவேக நெடுஞ்சாலை தகவல் மையம் அறிவித்துள்ளது. அதேவேளை, மஹரகமவிலிருந்து மாத்தறை வரையிலான பயணத்திற்கான கட்டணம் 530 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பண்டிகைக் காலத்தில் எதுவித தடையுமின்றி அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை இயக்கச் செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்தார்.
ஒவ்வொரு 30 கிலோ மீற்றர் தூரத்திற்கும் ஒரு வெளிச்செல்லும் நுழைவாயில் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிகவேக நெடுஞ்சாலைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|