அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனைப் பணிகளில் இருந்து விலகுமாறு அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் கோரிக்கை!

Wednesday, July 5th, 2023

அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனைப் பணிகளில் இருந்து விலகுமாறு, அனைத்து விற்பனை முகவர்களிடமும் கோரியுள்ளதாக, அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும், அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளின் விலையை, நாளை முதல், 40 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

விலை அதிகரிப்பின் மூலம், லொத்தர் விற்பனை துறையை தனியார்மயப்படுத்தும் திட்டத்துக்கான தயார்ப்படுத்தல் உள்ளதாக அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: