அதிபர் வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் – ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கான பரீட்சை நடத்தப் பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, September 11th, 2020

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காணப்படும் அதிபர்களுக்கான வெற்றிடங்களுக்கு அதிபர்களை நியமிப்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்தவும், இதுவரை பெயரில் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாடசாலை அமைப்பின் வளர்ச்சிக்கு மாவட்ட கல்வி குழுக்களை நியமிக்க ஜனாதிபதியின் முன்னணி இராஜாங்க அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி திணைக்களத்தின் அலுவலகங்களுக்கும் பிரதேச அலுவலகங்களுக்கும் இடை யிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் இதன்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிப்பதைத் தவிர்த்து, பாடசாலை அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் அரசியல்வாதிகள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றும், இது பொதுநலனுக்காகவும், அரசியல் தலையீட்டிற்காகவும் அல்ல என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காணப்படும் அதிபர் களுக்கான வெற்றிடங்களுக்கு அதிபர்களை நியமிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கான பரீட்சை நடத்தப் பட வேண்டும் இது சரியான முறையில் செயற்படாமையே அதிபர் வெற்றிடத்திற்கு முக்கிய காரணம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைச் செயல் அதிபர்களாக நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துபார்க்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என அவரது ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: