அதிபர் போட்டிப் பரீட்சை – வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதா?

Thursday, February 14th, 2019

நாடுமுழுவதும் இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான போட்டிப் பரீட்சையில் நுவரெலியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாக இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வினவுவதற்காக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்தவை பலமுறை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்த போது அது பலனளிக்கவில்லை.

இதனிடையே அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான போட்டிப் பரீட்சைக்காக புத்தளம் மாவட்டத்தில் தோற்றியிருந்த மூன்று பரீட்சாத்திகள் கையடக்கத் தொலைபேசியுடன் எழுதியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts: