அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு இல்லை – சமல் ராஜபக்ச!

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் சார்பில், கோத்தாபய ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகின்ற நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சமல் ராஜபக்சவை அதிபர் வேட்பாளராகவும், மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்க ஏற்கனவே எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என வாசுதேவ நாணயக்கார கூறியிருந்தார்.
Related posts:
காலை 6.30 இலிருந்து சீகிரியாவை பார்வையிட அனுமதி!
மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு வரி விதிப்பதன் நோக்கம் பாவனையை குறைப்பதே தவிர வரி வருமானத்தை அதிகர...
ஒருவரது நிலை கவலைக்கிடம் - இந்த நிமிடம் வரை அமைச்சரோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ வந்து ஆரதவு தரவில்லை -...
|
|