அதிபர் – ஆசிரியர் சங்கத்தினருக்கு அமைச்சரவை உபக்குழு அழைப்பு – எதிர்வரும் செவ்வாயன்று சந்திப்புக்கும் ஏற்பாடு!
Sunday, August 15th, 2021ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு தமது தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த தகவலை அதன் பிரதிநிதி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை முரண்பாடுகள் குறித்து அமைச்சரவை உபக்குழுவில் அறிவிக்குமாறு தமக்கு தெரியப்படுத்தபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சந்திப்பு அன்றையதினம் மாலை 6 மணியளவில் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி அதிபர் – ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை 34வது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பருத்தித்துறை உணவகங்களில் திடீர் சோதனை!
கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுங்கள் - சுகாதார வழி...
யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வு ஜூலை 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்!
|
|