அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் நாளை!

Tuesday, March 12th, 2019

அதிபர் – ஆசிரியர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சேவை சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

இதேவேளை நாட்டின் பிரதான நகரங்களில் நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்த உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறினார்.

22 ஆண்டுகளாக ஆசிரியர்-அதிபர் சேவை சம்பளத்தில் காணப்படுகின்ற முரண்பாட்டை தீர்க்காமை, 30 மாத காலத்தின் நிலுவைத்தொகையை வழங்காமை உள்ளிட்ட பிரதான காரணங்களை முன்வைத்து இந்த எதிரப்பு முன்னெடுக்கப்பட உள்ளது.

Related posts: