அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, July 27th, 2021

ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றயைதினம் இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக அமைச்சர்கள் சிலர் பங்கேற்கவுள்ளனர்.

ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள இணையவழி கற்றல் புறக்கணிப்பு இன்று (27) 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த பிரச்சினை தொடர்பில் நேற்று (26) இடம்பெற்ற இணையவழி அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி அடுத்த வருடம்முதல் புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இன்றையதினம் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் குறித்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி – 600 க்கும் மேற்பட்டோர்...
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க விரைவில் சினோபெக் நிறுவனத்துடன் முதலீட்டு ஒப்பந்தம் - அம...
எரிசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் - ஈர...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்கள...
ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றுவோரின் பிரச்சினைக்கு தீர்வு – தயாராக இருக்குமாறு கல்வியமைச்சர் சுசில் பிர...
மாகாண சபை தேர்தல் - சஜித் பிரேமதாச கூறிவருவது நடைமுறைச் சாத்தியமற்றது - ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர்...