அதிபர்கள் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!

Thursday, April 12th, 2018

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களின் சொந்த பணத்தில் செலவு செய்து அந்த கடமைகளுக்காக சென்றிருந்த போதிலும் இதுவரை அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை கவலைக்குரியது என அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திடம் வினவிய போது, அந்த ஆசிரியர்கள் வழங்கிய பற்றுச்சீட்டுக்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும்,இந்த நிலமையை சீரமைத்து குறித்த கொடுப்பனவுகளை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்தேர்தல் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்

Related posts: