அதிபர்களுக்கு பதவி உயர்வு : ஆசிரியர் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை!

Sunday, November 27th, 2016

2009ம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பரந்தளவிலான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியமனம் வழங்கப்பட்டு 06 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அந்த அதுபர்களுக்கு பதவி உயர்வு வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  அத்துடன் அவர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்து, தமக்கு நெருக்கமானவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக இந்த பதவி உயர்வுகள் வழங்கப்படுவதில்லை என்று ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

380616849Josep

Related posts: