அதிபர்களுக்கான சுற்றறிக்கை வெளியானது!

இவ்வருடம் அமுலுக்கு வரும் வகையில், 4,5 மற்றும் 10,11 ஆகிய வகுப்புக்களில் பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களை, மீண்டும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, அனைத்து அதிபர்களுக்கும் சுற்றறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த வகுப்புக்களில் உள்ள பாடப்புத்தகங்கள், தற்போது மீண்டும் விநியோகிக்காத நிலையிலேயே உள்ளன. அனைத்து புத்தகங்களையும் அச்சிடும் செலவை விட, இந்த நான்கு வகுப்புகளுக்கான புத்தகங்களை வருடாந்தம் அச்சிடும் செலவு, 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் 10,161 பாடசாலைகள், 734 பிரிவெனா பாடசாலைகள், விடேச தேவையுடையோருக்கான 25 பாடசாலைகள் போன்றவற்றுக்கு, 410 வகைகளில் 40 மில்லியன் புத்தகங்களை அச்சிடுவதற்காக, 4,500 மில்லியன் ரூபாய் வருடாந்தம் செலவு செய்யப்படுகின்றது.
Related posts:
|
|