அதிபர்களுக்கான ஆங்கில மொழி தேர்ச்சிப் பரீட்சையில் 32 பேர் சித்தி!

Wednesday, May 16th, 2018

இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய சேவையில் உள்ள அதிபர்களுக்காக நடத்தப்பட்ட ஆங்கில மொழி தேர்ச்சிப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 32 பேர் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்படி பரீட்சைக்காக 1,004 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 623 பேர் மாத்திரம் மேற்படி பரீட்சைக்காக தோற்றியிருந்தனர். இவர்களுள் 32 பேர் சித்தியடைய 591 பேர் சித்தியடையவில்லையெனவும் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள பரீட்சை முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது.

இலங்கை அதிபர் சேவையின் 2 ஆம், 3 ஆம் தரங்களைச் சேர்ந்தவர்களுக்கு வினைத்திறமை காண் பரீட்சைக்கு ஆங்கில மொழித் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அதிபர் சேவைக்கான புதிய சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய முதற்தடவையாக நடத்தப்பட்ட ஆங்கிலமொழி தேர்ச்சிப் பரீட்சை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: