அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணத்தில்  பலியாகும் உயிரினங்கள்!

Monday, March 26th, 2018

நாட்டில் தற்பொது நிலவும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக குடாநாட்டின் தீவகப் பகுதிகளில் குடிநீரின்றி கால்நடைகள் உயிரிழப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நீர் கிடைக்காமையினால் குடி நிரைத் தேடி நீரேந்து பகுதிகளுக்கு நீர் அருந்த செல்லும் கால்நடைகள் சேற்றுக்குள் சிக்கி உயிரிழப்பதாகவும் கால்நடை பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 நாட்களில் காரைநகர் பிரதேசத்தில் 2 மாடுகள் சேற்றுக்குள் சிக்கி கண்டுபிடிக்க முடியாமல் போனமையினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த பல மாதங்களாக அந்த பிரதேசங்களில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக மாடுகள் நீர் அருந்தும் அனைத்து நீர்த்தேக்கங்களும் வற்றி போயுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண கால்நடை பண்ணை உரிமையாளர்கள தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: