அதிக வெப்பநிலை – விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நிபுணத்துவ மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை!
Monday, March 4th, 2024அதிக வெப்பநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக காலி கராபிட்டிய மருத்துவமனையின் உளவியல் சிகிச்சைப் பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது கடுமையான வெப்பநிலை நீடித்து வருகின்றது. அநேகமான பகுதிகளில் நிலவி வரும் அதிக வெப்பநிலையானது திடீர் விபத்துக்களை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெப்பநிலை அதிகரிப்பினால் உளவியல் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளதுடன் உளவியல் நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெப்பநிலை அதிகரிப்பினால் உடன் தீர்மானங்களை எடுக்கும் ஆற்றல் குறையும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்களும் உண்டு என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விவசாயப் பண்ணை வலயங்கள் அமைக்க நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சர் தயா கமகே!
அம்புலன்ஸ் இலக்கங்கள் வெளியிடு – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் தினைக்களப் பணிப்பாளர்!
நெல் விலையை தீர்மானிக்கும் குழுவுக்கு விவசாய பிரதிநிதிகளை உள்வாங்க தீர்மானம் - விவசாய அமைச்சர் மஹிந்...
|
|