அதிக வெப்பநிலை – இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை!

Thursday, April 1st, 2021

வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.. வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த 4 மாவட்டங்கள் உள்ளடக்கம்..

இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் தீவிர எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 4 மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது.

குறித்த மாவட்டங்களில் வெப்பநிலை 32 பாகை செல்சியஸில் இருந்து 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும்,  பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: