அதிக விலை கொடுத்து எரிவாயு வாங்க வேண்டாம் – லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Sunday, April 3rd, 2022

அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சில குழுக்கள் அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகி யுள்ளதாக அதன் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

லிட்ரோ அறிவித்த விலையில் மட்டுமே எரிவாயுவை வாங்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்பவர்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ், நுகர்வோர் அதிகார சபை அல்லது லிட்ரோ நிறுவனத்துக்கு தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் லிட்ரோவின் 1311 ஹொட்லைனுக்கு இது குறித்து முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: