அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் -நுகர்வோர் அதிகார சபை!

Sunday, April 11th, 2021

புத்தாண்டு காரணமாக வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கையினை மாவட்ட மட்டத்தில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர், சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

அரிசி, கோழி இறைச்சி உள்ளிட்ட பல பொருட்கள் பண்டிகை காலங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவை தொடர்பிலும், பொருட்களின் தரம் குறித்தும் தாம் நாடளாவிய ரீதியில் கண்காணித்து வருவதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: