அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் வலியுறுத்து!

நாட்டின் அசாதாரண நிலைமையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன் அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளரும் கட்சியின் யாழ் மாநகரசபையின் உறுப்பினருமான றீகன் (இளங்கோ) வலியுறுத்தியுள்ளார்.
யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது தற்போதைய இக்கட்டான நிலைமையில் யாழ் மாநகர சபை முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்
மேலும் அவர் கூறுகையில் –
கொரோனா தொற்று காரணமாக அபாய நிலையில் இருக்கும் எமது பகுதி மக்களின் வாழ்வாதார தேவைப்பாடுகளை இலகுவாக பெற்றுக் கொடுக்கவும் அதனை நியாய விலைகளில் மக்களுக்கு கிடைக்கவும் வழிவகை செய்ய யாழ் மாநகரசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக நரைமுறை சாத்தியமற்ற விடயங்களை பேசிக்கொண்டிராது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க யாழ் மாநகரின் மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் முயற்சிக்க வேண்டும்.
நாளாந்தம் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்துவரும் நிலையில் எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் பலர் நாளாந்த வருமானங்களுக்குரிய வழி தெரியாது நிர்க்கதி நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் யாழ் மாநகருக்கட்பட்ட ஆளுகைக்கள் பல வியாபாரிகள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அநேக பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்து வருவதால் வருமானம் இன்றி வாழும் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர்அந்தவகையில் குறித்த பிரச்சினை தொடர்பில் யாழ் மாநரசபை அவதானத்தில் கொண்டு அவ்வாறு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தி மக்களுக்கு நியாய விலையில் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்
Related posts:
|
|