அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை இரத்தாகும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு!

காய்கறிகளையும் பழங்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணத்தடை காரணமாக மக்கள் வெளியிடங்களுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றமையால் நடமாடும் வியாபாரத்தை மேற்கொள்ள வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் குறித்த அனுமதியை பெற்றுள்ள பலர் அதிகளவான விலைகளில் பொரட்களை விற்பனை செய்துவரும் நிலை அதிகரித்துள்ளது.
இந்நிலையிலேயே கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடைமுறையை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த செயலணியின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை!
பதவி விலகினார் அமைச்சர் கபீர் ஹாஷிம்!
எரிபொருள் விலை அதிகரிப்பு எதிரொலி - இ.போ.சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து!
|
|