அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை!

Friday, May 29th, 2020

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தாலும், சில வர்த்தகர்கள் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்தே குறித்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts: